(எம்.எம்.மின்ஹாஜ்)

படையினரை சர்வதேச அளவில் தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனினும் படையினர் வேடத்தில் அட்டகாசம் செய்தோரை பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்த நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் தம்பர அமில தேரர், 

பெத்த பிக்கு வேடத்தில் அட்டகாசம் செய்வோரும் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டி சிங்கள வர்த்தக சங்க சம்பத் கட்டடத்தில் நடைபெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அடுத்த தேர்தலின் பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தனித்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும் அனைத்துக்கும் நாம் தயாராக வேண்டும். இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு மக்கள் அனுமதி வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.