(க.கமலநாதன்)

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் அனுமத்திக்கப்பட்ட விமான நிலையமூடாகவோ அல்லது துறைமுகத்தினூடாகவோ செல்லாது சட்ட விரோதமான முறையில் படகொன்றில் அவுஸ்திரேலியாவிற்கு  சென்றடைந்துள்ளதையடுத்து அந்நாட்டு அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ள வேளை கட்டுநாயக்க குற்றப்புலணாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதாகியுள்ள குறித்த நபர் யாழப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்து. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.