(எம்.மனோசித்ரா)

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நிபுணத்துவ குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் பியதாச, 

அக் குழுவின் இறுதி அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை கருத்திற்கொண்டே  சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஜே.வி.பி. மற்றும் பொது எதிரணியினர் குறிப்பிடுவது போன்று இதன் மூலம் நாட்டுக்கு எந்தவித பாதகமும் ஏற்படப் போவதில்லை. அவ்விரு கட்சியினரும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களுக்கும் எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். 

ஆகவே அவர்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.