(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்களை முறையாக மேற்கொள்ள தெரியாமல்   அரசாங்கத்தை வீழ்த்த  தலைநகரை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு,  தோல்வியடைந்தவர்கள்  கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொது எதிரணியின்  கொள்கையற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட   அப்பாவி பொது மக்கள் சுகயீனமுற்ற  விடயத்தில் முறையற்ற விதமாக  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச என்னை குற்றஞ்சாட்டுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் போராட்டங்களினை மேற்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தும்  அளவிற்கு  அரசாங்கம் சர்வாதிகாரத்தையோ, குடும்ப ஆட்சியினையோ நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.