இலங்கையின் மரத்தளபாடங்கள் மற்றும் மரவேலை மேற்பூச்சு வகைகளை விநியோகிப்பதில் இணையற்ற முன்னோடியான JAT ஹோல்டிங்ஸ், இலங்கையின் தொழிற்துறைச் சந்தையில் புரட்சிகரமான மற்றுமொரு தயாரிப்பான “Master Plaster”  ஐ அறிமுகம் செய்துள்ளது.

மதில் சுவர் ஒன்றை கட்டுவதன் பாரம்பரிய முறை என்பது, செங்கல் அல்லது சீமெந்துக் கல் கொண்டு கட்டியபின்னர் அதற்கு மேற்பூச்சு அல்லது பிளாஸ்டர் செய்வதாகும். பிளாஸ்டர் என்பது பாரம்பரியமாக மணல்-சீமெந்து கலவையைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அமைந்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய, POP/putty  மேற்பூச்சு பூசப்படுகிறது. இரு கட்டமாக பல செயற்பாடுகளை கொண்டமைந்துள்ளது. இதன் போது மணல், சீமெந்து மற்றும் நீர் ஆகியன தேவைப்படுகின்றன. 

ஆனாலும் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒற்றை நேரடி ‘Master Plaster,’ மேற்பூச்சு முறையின் மூலமாக உள்ளக சுவர்களை ப்ளாஸ்டர் செய்யும் தேவை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணமும் மீதப்படுத்தப்படுவதுடன், சிறந்த பெறுபேறுகளும் கிடைக்கின்றன.

‘Master Plaster’ இன் பிரதான அனுகூலங்களில் ஒன்றாக, சகல உள்ளக சுவர்களிலும் இதை நேரடியாக இலகுவாக பூசிக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். குறிப்பாக செங்கல், சீமெந்துக் கல் அல்லது கொங்கிறீற் எதுவாக இருந்தாலும், இலகுவாகவும் நேரடியாகவும் பூச்சிக் கொள்ள முடியும். மணல்-சீமெந்து பிளாஸ்டர் மற்றும் wall putty ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. மேலதிக அனுகூலமாக, 20 சதுர அடியில், 25 கிலோகிராம் கொண்ட 12 மில்லிமீற்றர் பொதிகளில் காணப்படுகின்றன. இதன் மூலம் செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், 250 மெஷ் அளவு என்பதன் மூலமாக, அதன் தரம் உறுதி செய்யப்படுவதுடன், 96 சதவீதத்துக்கும் அதிகமான தூய்மை மூலமாக சிறந்த பிணைப்பு மற்றும் மிகவும் சிறந்த கண்ணாடி போன்ற நிறைவை வழங்கும் வகையில் சுவரில் மிருதுவாக படிகின்றன. மேலும், ‘Master Plaster’ ஐ ஒரே நாளில் பூசிக் கொள்ள முடியும் என்பதுடன், மூன்று தினங்களுக்குள் வர்ணம் பூசிக் கொள்ளக்கூடியதாகவும் அமைந்திருக்கும். மணல் - சீமெந்து பிளாஸ்டர் முறை என்பது ஆகக்குறைந்தது 8 – 10 தினங்களின் பின்னர் நீர் காய்வதற்கும் அவசியமாகிறது. ஆனாலும் ‘Master Plaster’ முறையில் இதற்கான அவசியம் எதுவுமில்லை. எனவே நேரம் சேமிக்கப்படுவதுடன், பணமும் சேமிக்கப்படுகிறது.

புரட்சிகரமான நவீன ‘Master Plaster’ முறை என்பது, பாவனையாளருக்கு நட்புறவான செயற்பாட்டுடன், சுமார் 70 சதவீதம் வரை நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரெடி-மிக்ஸ் தயாரிப்பு என்பது பெருமளவு நீருக்கான தேவையை கொண்டுள்ளதுடன், மேசன் தொழிலாளர்களுக்கு சிறந்த நிபுணத்துவ பெறுபேறுகளை உறுதி செய்வதுடன், பாரம்பரிய முறைகளில் ஏற்படக்கூடிய தவறுகள் குறைக்கப்பட்டுள்ளன‘Master Plaster’ இழுவை திறன் என்பதன் மூலமாக ஏற்படக்கூடிய சிறிய வெடிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. அத்துடன், மணல் - சீமெந்து பிளாஸ்டர் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பெறுபேறுகளை வழங்குவதாக அமைந்துள்ளது

‘Master Plaster’ இல் காணப்படும் இலகு எடை கொண்ட துணிக்கைகள், மணல் - சீமெந்து முறையில் காணப்படும் கட்டமைப்புகள் மீதான அளவுக்கதிகமான எடையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

JAT இன் தொழில்நிலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கமைய, தீப்பற்றாத கலவையைக் கொண்டுள்ள, ‘Master Plaster’ முறை காரணமாக கட்டடமொன்றில் தீ பரவும் சந்தர்ப்பங்களில் உயிரிழிப்புகள் ஏற்படுவதை பெருமளவில் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், குறைந்த அனல் கடத்துதிறன் காரணமாக, வலு சேமிப்பு உறுதி செய்யப்படுவதுடன், குறைந்தளவு கட்டணப்பட்டியல்களை பதிவு செய்கிறது.

மணல் - சீமெந்து பிளாஸ்டர் முறை என்பது putty பூச்சின் பின்னர், மணல் கடதாசி கொண்டு சீர் செய்யப்பட வேண்டியுள்ளது. இது மிகவும் சிக்கலான செயற்பாடு என்பதுடன், அதிகளவு நேரத்தை விரயமாக்கக்கூடியது. இதேவேளை, ‘Master Plaster’ முறை மூலமாக இலகுவாகவும், தூசுத்துணிக்கைகள் இன்றிய மேற்பூச்சு செயன்முறை உறுதி செய்யப்படுவதுடன், நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. சுகாதாரத்துக்கும் பாதுகாப்பானதாகும். 

ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், மணல் - சீமெந்து முறையை விட உயர் தரம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. மேலும், JAT இன் கிறீன் கொள்கைக்கமைய ‘Master Plaster’ என்பது சர்வதேச சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளில் தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது. ஆற்று மணல் அகழ்வு, பயன்பாடு மற்றும் கொண்டு செல்லல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அமைந்துள்ளது. 

JAT Holdings நிறுவனம், புகழ்பெற்ற தனது தெரிவுகளில், இத்தாலியின் SAYERLACK  மரப்பூச்சு வகைகள், அமெரிக்காவின் Herman Millar அலுவலக தீர்வுகள், பிரித்தானியாவின் Crown மற்றும் Permoglaze அலங்கார உள்ளக மற்றும் வெளிப்புற சுவர் பூச்சுகள், இத்தாலியின் Borma Wachs பராமரிப்பு தீர்வுகள் பிரான்ஸ் நாட்டின் Norton Abrasives (Saint Gobain)  மற்றும் Brush Master பிரஷ் வகைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. குழுநிலைச் செயற்பாடு மற்றும் கூட்டாண்மை குடியுரிமை ஆகியவற்றில் கம்பனி அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. 

இதற்கமைய தனது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், தனது தொழில்நுட்பவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகளை  பெற்றுக் கொடுப்பதற்கான முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான  செயற்பாடுகளின் போது, சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதுடன், இந்தியா,  பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.