நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மக்களும், கால்நடைகளும் நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் திருக்கேதீஸ்வர திருத்தளத்தின் பாலாவி தீர்த்தக்கரை நீரின்றி வற்றியுள்ளது.

இதனால் திருக்கேதீஸ்வர திருத்தளத்திற்கு வரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.