நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி , அவற்றுக்கு தீ வைத்ததுடன் , ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

நேற்றைய தினம் 4 மணியளவில் இலக்கங்கள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. 

குறித்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்களை துரிதப்படுத்தி உள்ளதாகவும் , பொலிசார் தெரிவித்தனர்.