இந்தோனேஷியாவின், ஜவா தீவில் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸில் பயணித்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஜாவாதீவிலுள்ள உள்ள ஒரு தனியார் நிறுவனத்தைச்  சேர்ந்த ஊாழியர்கள் நான்கு பஸ்கில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த ஒரு பஸ் கட்டுப்பாட்டினை இழந்து நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தாக்கொன்றில் வீழ்ந்தே இந்த விபத்து சம்பவத்துள்ளது.

இதனால் பஸில் பயணித்த 21 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.