அமெரிக்க ஓபன்தொடரின் மகளிருக்கான இறுதியாட்டத்தில் நடுவராக பணியாற்றியவர் பெண்களிற்கு எதிரானவர் என குற்றம்சாட்டியுள்ள செரீனா வில்லியம்ஸ் ஆண்களை விட தன்னை நடுவர் கடுமையாக தண்டித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஓபன் தொடரின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே செரீனா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனிக்கிழமை போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை செரீனா விதிமுறைகளிற்கு மாறாக விளையாடினார் என நடுவர் கார்லோஸ் ரமோஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

போட்டியின் போது பயிற்றுவிப்பாளரிடமிருந்து பயிற்சி அறிவுரையை பெற்றார்,ரக்கெட்டை உடைத்தார், நடுவரை திருடன் என அழைத்தார் என நடுவர் செரினா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

இவற்றின் காரணமாக செரீனா இறுதிப்போட்டியில் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

எனினும் இதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள செரீனா நடுவர் பெண்களை விட ஆண்கள் மீது அனுதாபம கொண்டவர் பெண்களிற்கு எதிரானவர் என தெரிவித்துள்ளார்

நான் பல போட்டிகளில் ஆண்கள் இதனை விட மோசமாக நடுவரை அழைப்பதை பார்த்திருக்கின்றேன், என செரீனா தெரிவித்துள்ளார்.

நான் இங்கு பாலியல் சமத்துவம் மற்றும் பெண் உரிமைகளிற்காக குரல்கொடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் தன்னை திருடன் என தெரிவித்தமைக்காக அவர் ஒருபோதும் அவர்களை தண்டிக்கவில்லை என செரீனா தெரிவித்துள்ளார்.

</iframe

 </iframe