இலங்கை கடற்படையினரால் இரணைதீவு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கடலில் மிதந்து வந்த நிலையில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான  284 கிலோகிரேம் கேரள கஞ்சா அடங்கிய ஏழு பொதிகள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையே நாளைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.