போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா என்ற இலங்கையர், தாய்லாந்தின் பேங்கொக் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சர்வதேச பொலிஸாரினால் இது குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 2013 ஆம் ஆண்டு 30 கிலோகிரேம் ஹெரோயினுடன் இலங்கையில் கைதுசெய்யப்பட்டதுடன் அது தொடர்பில் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே 2013 ஆம் ஆண்டு இவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றதுடன் அவரை கைதுசெய்வதற்காக இலங்கை பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் தோடி வந்தனர்.

இதன்படி சந்தேக நபர் தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அதனடிப்படையில் சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக இராஜாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ்போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.