(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சர்வக் கட்சி பாராளுமன்ற குழு பிரதிநிதிகள் நாளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தியாவின், டில்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் இவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந் நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந் உள்ளிட்ட அரச தலைவர்களையும், சில மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் உள்ளிட்டவர்கள் பங்குபற்றவுள்ளனர்.