(லியோ நிரோஷ தர்ஷன்)

மட்டக்களப்பு, புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணப் பணிகளை கைவிடாவிடின் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போமென அப் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அரசியல் பின்புலத்துடன் நிர்மாணிக்கப்படும் குறித்த தொழிற்சாலையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள போதும், ஜனாதிபதி இதுவரை அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

அத்துடன் இந்த பகுதி மக்கள் குடிப்பதற்கே நீரில்லாமல் அல்லோப்படும் நிலையில் இவ்வாறான திட்டங்களினூடாக நிலக்கீழ் நீரைப் பயன்படுத்தி இதுபோன்ற தொழிற்சாலை செயற்படுமாயின் புல்லுமலை உள்ளிட்ட அதனை சூழ உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் குடிப்பதற்கு நீரின்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.