கலேவல பொலிஸ் பிரிவில், இடம்பெற்ற வாகன விபத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 தம்புள்ள, கலேவல பிரதான பாதையில் துவிச்சக்கர வண்டியில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
 கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஏ. செல்வராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 டிப்பர் வண்டியில் மணல் ஏற்றி வந்ததாகவும் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த கலேவல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.