(எம்.சி.நஜிமுதீன்)

ஷெஹான் சேமசிங்க, மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு விஷம் கலந்த பாலை பகிர்ந்தளித்ததாக என் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தார். ஆகவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதன‍ை தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச பாராளுமன்றில் என்மீது குற்றச்சாட்டு முன்வைத்தார். அவர் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியே அதனை முன்வைத்தார். பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. 

இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி என் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.  ஆகவே அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

எவ்வாறெனினும் இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.