எகிப்தில் அரசுக்கு எதிராக செயற்பட்ட 75 பேருக்கு மரண தண்டனை

Published By: Digital Desk 4

08 Sep, 2018 | 06:05 PM
image

எகிப்து நாட்டில் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது மோர்சியை பதவிநீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றிய அப்டெல் பட்டா சிசியின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

எகிப்து நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் உள்ள ரப்பா அடாவியா சதுக்கத்தில் முகாம்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் இறங்கினர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும், ஜனாதிபதி அப்டெல் பட்டா சிசியின் ஆட்சிக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவர்களில் சுமார் 700 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் எஸ்ஸாம் அல்-ஏரியான், முஹம்மது பெல்ட்டாகி உள்ளிட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35