சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  (Temple Tow)  பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான வியாபாரியே என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


குறித்த நபர் இன்று அதிகாலை 8.30 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது    3 கிலோ 200 கிராம் பெறுமதியான 31 தங்க பிஸ்கட்களை அவரிடமிருந்து மீட்டுள்ளனர். 

இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி 2 கோடியே 8 லட்சம் பெறுமதியானது (2,08,00,000) என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்