கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். 

இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம் நினைத்தது போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கத்திடம் காட்டினோம்.

தற்பொழுது அரசாங்கம் இந்த மக்கள் வெள்ளம் குறித்து ஒவ்வொரு கதையைக் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்.