விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு பயன்படுத்தப்பட உள்ள விண்வெளி ஆடைகளை மற்றும் மாதிரி விண்கலம் போன்றவை காட்சிக்கு வைத்துள்ளது. 

இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6ஆவது எடிஷன் விழாவில் அறிவித்தார். 

இஸ்ரோவின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.