அமெரிக்காவில் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உட்பட 3 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி நேற்று வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். 

இதில் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் ஒரு இந்தியர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில் பொலிஸார் குறித்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூட்டில் இறந்த இந்தியர் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கன்டேபி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பலியான ஏனைய இருவரும் லூயிஸ் பெலிப்பி கால்டிரான், ரிச்சர்ட் நியூகமர் என தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பிருத்விராஜ் சடலத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.