கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது அவருடைய பயணப்பை பஸ்ஸின் வாயில் பகுதியில் கொழுவுபட்டு இழுபட்டதில் கீழே விழுந்த இளைஞன் குறித்த பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாங்குளம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய கோ. திருவள்ளுவர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள புளியங்குளம் பொலிஸார் இ.போ.சபை பஸ்ஸை தடுத்து வைத்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.  

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் வுவனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.