(எம்.எப்.எம்.பஸீர்)

விக்கினேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவும் என வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பா. டெனிஸ்வரன் தெரிவித்தார்.

என்னூடாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பாராளுமன்ற  உறுப்பினர் சுமந்திரன் பழி வாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்