(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒன்றாகும். ஜனநாயக விரோத ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய உயிரை பணயம் வைத்தேனும் போராட அனைவரும் முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சிங்கப்பூருடன் செய்துகொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

சிங்கப்பூருடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஒப்பந்தமானது கைச்சாத்திட்டிருக்கும் முறை முற்றிலும் ஜனநாயக விரோதமானதாகும்.
இது நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக தன்மையை வெளிப்படுத்தி காட்டுகின்றது.

ஜனநாயக விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றார்.