அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவரை கைதுசெய்த தலவாகலை விசேட அதிரடிப்படையினர் அவரை அட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

மணல் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இருந்தமையினாலேயே இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறியும் அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.