இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்று பஸ்வண்டிகள் மீது இன்று பல்வேறு பிரதேசங்களில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேற்படி சம்பவத்தில் சாரதி ஒருவர் உட்பட பயணியொருவரும்  கயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்பட்டுவருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும்  ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையிலையே குறித்த பஸ்வண்டிகள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி டிப்போவுக்கு சொந்தமான இரண்டு பஸ்வண்டிகளும் வாகரை டிப்போவுக்கு சொந்தமான ஒரு பஸ்வண்டியுமே குறித்த கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. 

தாக்குதலுக்குதலுக்கு  இலக்காகிய களுவாஞ்சிகுடி டிப்போவுக்கு சொந்தமான இரண்டு வஸ்வண்டிகளில் ஒன்று கல்முனையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட் பதினெட்டாம் கட்டை பிரதேசத்தில் வைத்தும், மற்றய இரண்டு வஸ்வண்டிகளும் மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது  களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்வைத்தும், கல்வீச்சுக்கு இலக்காகி காண்ணாடிகள் செதடைந்துள்ளது.

குறித்த பஸ்வண்டியை சேர்ந்த சாரதிகள் களுவாஞ்சிகுடி பெலிஸ் நிலையத்திலும் வாழைச்சேனை  பொலிஸ் நிலையத்திலும் தங்களது முறைப்பாடுகளை செய்துள்ளதாக நடத்துனர்கள் தெரிவித்தனர்.