மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள், சந்தைகள் மற்றும் தனியார், அரச வங்கிகள் யாவும் மூடப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலையை மூடுமாறு வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் இடம்பெற்றது.

மேலும் இதன் காரணமாக அரச அலுவலகங்கள் எவையும் இயங்கவில்லை என்பதுடன் போக்குவரத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்து வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்லாமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.