(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு குறித்த நகல் வரைபை வெகு விரைவில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். இந்த நகல் வரைபு குறித்து இரண்டு நாட்கள் விவாதமும்  வழங்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

 புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து பொது எதிரணி முரண்படலாம் ஆனால் அரசாங்கம் தயாராகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொது எதிரணி உறுப்பினர் உதய கம்மன்பில அரசியல் அமைப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்