மத்­தியப் பிர­தே­சத்தில், கடன் தொல்­லையால் பாதிக்­கப்­பட்ட ஒருவர், தனது மனை­வியை 1 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்ய விரும்­பு­வ­தாக முக­நூலில் பதிவு செய்துள்ளார். பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தியுள்ள இச்­சம்­பவம் தொடர்பில் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மத்­திய பிர­தேச மாநிலம், கார்கோன் மாவட்­டத்தைச் சேர்ந்­தவர் திலீப் மாலி. அவர், கடன் தொல்­லையால் பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், கடன் தொகையை அடைப்­ப­தற்­காக தனது மனை­வியை 1 இலட்சம் ரூபா­வுக்கு விற்க விரும்­பு­வ­தா­கவும், அவரை வாங்க விரும்­பு­ப­வர்கள் தன்னை தொடர்பு கொள்­ளு­மாறும் முக­நூலில் பதிவு செய்­துள்ளார். மேலும், தனது மனைவி, இரண்டு வயது மகள் ஆகி­யோரின் புகைப்­ப­டங்­க­ளையும் அவர் வெளி­யிட்­டுள்ளார்.

ஹிந்தி மொழியில் எழு­தப்­பட்­டுள்ள இந்தப் பதிவை, உற­வி­னர்கள் பார்த்து, அவ­ரது மனை­வி­யிடம் தெரி­வித்­துள்­ளனர். அதை­ய­டுத்து, திலீப்பின் மனைவி பொலிஸ் நிலை­யத்தில் தன் கணவர் மீது முறைப்­பாடு அளித்­துள்ளார். இது­தொ­டர்­பாக, பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து, தலை­ம­றை­வா­கி­யுள்ள திலீப் மாலியைத் தேடி வரு­கின்­றனர்.

தன்­னையும், தனது குடும்­பத்­தி­ன­ரையும் இழி­வு­ப­டுத்­து­வ­தற்­கா­கவே முக­நூலில் தனது கணவர் இவ்வாறு பதிவு செய்­துள்ள­தாகக் குற்­றம்­சாட்­டி­யுள்ள மனைவி, கடன் தொல்லை காரணமாக அவர் இந்தூரில் இருந்து அவருடைய சொந்த கிராமத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.