வரட்சி காரணமாக வவுனியாவில் 13 ஆயிரத்து 405 விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு

Published By: Daya

07 Sep, 2018 | 03:06 PM
image

வவுனியாவில் ஏற்பட்ட வரட்சி நிலை காரணமாக 13 ஆயிரத்து 405 விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கூலித் தொழில் செய்வோர் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் வரட்சியால் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பல நன்னீர் நிலைகள், குளங்கள் என்பவற்றில் உள்ள நீர் வற்றியுள்ளது. அத்துடன் மழை வீழ்ச்சியும் குறைவாக உள்ளது. இதனால் மழை மற்றும் குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை நடவடிக்கைகள் மற்றும் விவசாய  நடவடிக்கைகள் என்பனவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் கூலி வேலை செய்வோர் பாதிப்படைந்துள்ளனர்.


குறிப்பாக, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 6,686 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2207 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 460 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 4052பேரும் ஆக 13,405 பேர் கூலித் தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிப்பை எதிர்நோகியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24