விஜய் சேதுபதி நடித்த “கடைசி விவசாயி” தழிழ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன்  கடைசி விவசாயி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் இதில் கடைசி விவசாயியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொண்டிருக்கும் இயக்குநர் மணிகண்டன் அண்மையில் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தவிர மற்ற நடிகர்கள் விபரங்கள் குறித்து எதையும் படக்குழுவினர் இது வரை வெளியிடவில்லை. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கிறார்கள்.

இதனிடையே ‘கடைசி விவசாயி ’படத்தின் பணிகள் முடிவடைந்ததால் அடுத்ததாக விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் மாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் செக்கச் சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, கடைசி விவசாயி ஆகிய படங்களின் பணிகள் முடிவடைந்து வரிசையாக வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.