(பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து நெவில் அன்­தனி)பங்­க­ளா­தேஷின் டாக்கா பங்­பந்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்று வரும் தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ளன கிண்ண "பி" குழு­வுக்­கான ஆரம்பப் போட்­டியில் இந்­தி­யா­விடம் தோல்வியடைந்த இலங்கை, இன்­றைய தினம் இரவு மாலை­தீ­வு அணியை சந்­திக்­க­வுள்­ளது.இந்­தி­யா­விடம் கடந்த புத­ன்கிழமை 2–0 என்ற கோல்கள் கணக்கில் தோல்­வி­ய­டைந்த இலங்கை, அரையிறுதிப் போட்­டியில் விளை­யாடும் தகு­தியை சொற்­ப­ அள­வேனும் பெறு­வ­தற்கு மாலை­தீவு அணியை வெற்­றி­கொண்டே ஆக­வேண்­டிய நிலையிலிருக்­கின்­றது.

இதன் கார­ண­மாக இன்­றைய போட்­டியை இலங்கை அணி பலத்த நெருக்­க­டிக்கு மத்­தியில் எதிர்­கொள்ளும் என்­பதில் சந்­தேகமில்லை.

மேலும் மாலை­தீ­வு­க்கும் இலங்­கைக்குமி டையில் 1991 ஆம் ஆண்டு முதல் நடை­பெற்­றுள்ள 12 சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் 7 இல் மாலை­தீ­வு வெற்­றி­பெற்­ற­துடன் 4 போட்­டிகள் வெற்­றி­ – தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தன. 

ஒரே ஒரு போட்­டியில் பெனல்டி அடிப்­ப­டையில் இலங்கை வெற்­றி­பெற்­றுள்­ளது. அதா­வது முழுமையான ஆட்ட நேரத்தில் இன்று ­வரை மாலை­தீ­வு­ அணியை இலங்கை வெற்­றி­கொண்­ட­தில்லை.

மாலை­தீ­வில் 2006 இல் நடை­பெற்ற பொன்­விழா கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் இறுதியாட்­டத்தில் மாலை­தீ­வு­ம் இலங்­கையும் மோதின. அப் போட்டி முழு நேரத்­தின்­போது 1–1 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­ – தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது. 

இதனையடுத்து பெனல்டி முறையில் இலங்கை வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

எனவே மாலை­தீ­வு­க்கும் இலங்­கைக்குமிடை­யி­லான நேருக்கு நேர் போட்­டி­களின் அடிப்­ப­டையில் இன்­றைய போட்­டியில் இலங்கை வெற்­றி­பெ­று­வ­தாக இருந்தால் கடும் பிர­யா­சை­யுடன் விளை­யாட­ வேண்­டி­வரும் என்பது குறிப்பிடத்தக்கது.