மட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் மட்டு. மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமான நிலையில் உள்ளது. குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து எதுவும் இடம்பெறாத நிலையில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனினும் அரச போக்குவரத்துச் சேவை சில பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சில பிரதேசங்களில் டயர்களை வீதிகளில்  போட்டு எரியூட்டப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நீதி கோரும் சிவில் அமைப்பு உள்ளிட்ட எதிரணியினரால் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அவர்களால் ஹரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதகவும் தெரியவருகின்றது.