கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை  இனந்தெரியாத  நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை

Published By: Daya

07 Sep, 2018 | 11:17 AM
image

கிளிநொச்சி  இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க்  நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக  சென்றுவிட்டு வரும்போது நேற்று அதிகாலை ஆகிவிட்டது. 

பஸ்ஸிலிருந்து இறங்கி விடுதியினை அண்மித்த சமயத்தில் 1.15மணியளவில் 25தொடக்கம் 30வயதுடைய எட்டு பேர் கொண்ட  இளைஞர்கள் குழுவால் குறித்த முகாமையாளரை வழிமறித்து உன்னில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. உன்னுடைய அடையாள அட்டையை காட்டு எனக்கூறி விட்டு உன்னுடைய இருப்பிடத்திலும் சந்தேகம் உள்ளது எனக்கூறி வலுக்கட்டாயமாக மோட்டார்‌ சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவரிடம் இருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு  தப்பித்துச்சென்றுள்ளனர்.  

காயமடைந்து மயக்க நிலையில் இருந்த தனியார் காப்புறுதி முகாமையாளர் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு  அவசர‌ இலக்கமான 119 ற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்களால் குறித்த முகாமையாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்பணப்பையில் 21,900ரூபா பணமும், அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவை இருந்ததாகவும், தாக்குதல் நடத்திய இளைஞர் குழு மதுபோதையில் இருந்ததாகவும் குறித்த முகாமையாளரால்  இன்று காலை  வைத்தியசாலை பொலிஸாரிடம்     முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34