11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹொங்கொங் அணியை 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

சிங்­கப்­பூரில் நடை­பெற்­று­வரும் 11 ஆவது ஆசிய வலைப்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் தொடரில் மொத்தம் 12 நாடுகள் பங்­கேற்று விளை­யா­டி ­வ­ரு­கின்­றன.

இத் தொடரில் மோதிய 5 போட்­டி­க­ளிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி கோப்பைப் பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அந்­த­ வ­கையில் இன்று நடை­பெற்ற இரண்­டா­வது சுற்றுப் போட்­டியில் ஹொங்­கொங் அணி, தர்ஜினியின் ஆட்டத்துக்கும் உயரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாது 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கையிடம் வீழ்ந்தது.

நாளை தொடரின் ஓய்­வு நாள் என்பதுடன் நாளை மறுதினம் முதல் அரை­யி­றுதிப் போட்­டிகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளமையும் குறிப்­பி­டத்­தக்­கது.