சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை தீயிட்டு எரித்து வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

"வாள்கள், கை கோடாரிகளுடன் இலக்கத் தகடுகளற்ற 4 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டின் ஜன்னல்களை  உடைத்ததுடன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் பாடநூல்களையும் கற்றல் உபகரணங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.

மேலும் வீட்டின் முன் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்ததுடன் அங்கிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு பவுண் சங்கிலி என்பவற்றையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த வீட்டின் உரிமையாளர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே காணி பிரச்சினையொன்றை மையமாகவே வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தனது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.