மாங்குளம் பிரதேசத்தில் கடந்த தினத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மிதிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் கீழ் பணிபுரிந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் மனைவி விஷம் அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவரின் திடீர் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.