பெல்லன்வில பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதான கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் குறித்த பெண் வைத்தியரின் கணவர் மற்றும் பிள்ளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.