(இராஜதுரை ஹஷான்)

போலியான  போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்ற விடயத்தை மஹிந்த உட்பட அவரது தரப்பினர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்திற்கு எதிராக கோசம்  எழுப்பினால் மாத்திரம்  அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று நினைப்பவர்களின் அரசியல் சிந்தனைகள் வரவேற்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

கூட்டரசாங்கத்தின்  சிறந்த நிர்வாகம் 2020 மட்டுமல்ல 2030 வரையில் தொடரும்   அரசாங்கத்தை வீழ்த்துவதாக நேற்று பொது எதிரணியினர் மேற்கொண்ட போராட்டத்தின் பெறுபேறுகள் என்ன என்பது அவர்களுக்கே புரியாமல் போய்விட்டது  எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 72 ஆவது வருட நிறைவு இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.