(எம்.மனோசித்ரா)

நாமல் ராஜபக்ஷ தலைவராக முயற்சித்த முதல் முயற்சியிலேயே பாரிய தோல்வியை சந்தித்த பொது எதிரணியின் அரசை கவிழ்க்கும் போராட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளாமை உள்வீட்டு பிரச்சினையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக  இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலின் போது பொது ஜன பெரமுன பெற்றுக் கொண்ட வெற்றிக்கு எதிர்மாறாக இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பாரிய பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.