(நா.தனுஜா)

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவதற்கான எமது முதற்படியில் வெற்றி கண்டுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே 20ஆவது திருத்தத்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

பிரேரணைக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், தேவையேற்படுமாயின் இப்பிரேரணையை மக்கள் வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.