(நா.தனுஜா)

அரசாங்கத்துக்கு எதிராகக் கூட்டு எதிரணியினர் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக மரபினைப் புலப்படுத்தவில்லை. மாறாக மதுபோதையில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு போன்றே அமைந்திருந்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது ஜனநாயக உரிமையாகும். எனினும் இந்த போராட்டம் களியாட்டம் போல் காணப்பட்ட எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று  பத்தரமுல்லையில் இடம்பெற்றது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.