(ரி.விரூஷன்)

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் காணப்பட்ட பொது மக்களது காணிகளில் ஒரு தொகுதி காணி மற்றும் பாடசாலை என்பன மக்களிடம் இன்று மீள கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மயிலிட்டி கலைமகள் வித்தியாலய காணியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்து பாடசாலையின் உறுதிப்பத்திரமானது மாகாண கல்வி பணிப்பாளரிடமும், காணி உறுதிபத்திரமானது மாவட்ட அரச அதிபரிடமும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியால் வழங்கப்பட்டது.

இதன்படி மயிலிட்டியில் உள்ள கலைமகள் வித்தியாலயம், ஆணைகோட்டை குளாவடி பகுதியில் காணப்படும் இராணுவ முகாம் அகற்றப்பட்டு அதனுள் காணப்படும் எட்டு வீடுகள் என்பனவும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவை தவிர குரும்பசிட்டி பகுதியில் காணப்படும் பல நோக்கூட்டுறவு சங்க கட்டடம் மற்றும் கிராம சங்க கட்டடம் என்பனவும் மீள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நேற்றைய தினம் மொத்தம் 4 ஏக்கரும் 7 பரப்பும் அளவான நிலப் பகுதியானது மீள கையளிக்கப்பட்டுள்ளது.