ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

28வது ஆண்டாவது இந்த வழக்கை முடித்து வைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது மகிழச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்கள் விடுதலை தொடர்பில் இரு தடவை அறிவித்திருந்தார் இதன் காரணமாக இவர்களை தமிழக அரசு உடனடியாக  விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்திக்கப்போகின்றேன் அந்த சந்திப்பின் போது விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பேன் எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.