தென்னிந்திய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வெள்ளையா சுப்பையா உடல் நலக் குறைவால் தனது 78ஆவது வயதில் நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.கடந்த ஒரு வார காலமாக உடல் நலக் குறைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன்,வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டை மாரியம்மன், என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் சுப்பையா நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.