பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டமையால் சபாநாயகர் கரு ஜயசூரிய சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணி  கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக  நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதும் குறைந்தளவான பாராளுமன்ற உறுப்பினர்களே சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந் நிலையில் இன்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்காதமையால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.