பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அவாமி தேசிய கட்சியை சேர்ந்த பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் உள்ள அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர் மொகமது இப்ரார் கலீல். இவர் இன்று பெஷாவர் மாகாணத்தில் டெக்கால் பகுதியில் தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கலீலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் காயமடைந்த அவரையும், உறவினர் அர்ஷத்தையும் வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.  

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பெஷாவரில் பட்டப்பகலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் ஹரூண் பிலோர் உள்பட12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.