பொதுவாக எம்மில் பலர் உடல் நலம் குன்றியிருக்கும் போது வைத்தியர்களை அணுகி, ஆலோசனை செய்து அவர் எழுதித்தரும் ஆண்டிபயாடீக் மருந்துகளை உட்கொள்வார்கள். 

சிலர் எப்போதெல்லாம் சுகவீனம் அடைகிறார்களோ அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதற்கு முன் வைத்தியர்களை சந்தித்து அவர் எழுதி தந்த மருந்து, மாத்திரைகளை நினைவில் வைத்துக் கொண்டு நேராக மருந்து கடைகளுக்கு சென்று அத்தகைய மருந்துகளை கேட்டு வாங்கி உட்கொள்கின்றனர். 

இதுபோன்ற சுயமருத்துவம் தவறு என்ற மருத்துவ துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏனெனில் Staphylococcus epidermidis என்ற வடிவில் இந்த சுயமருத்துவம் மனிதர்களை அழிக்க கூடியவகையில் வளர்ந்திருப்பதாகவும் அறிவுறுத்துகிறது.

அதாவது மனிதர்களான நாம் எடுத்துக் கொள்ளும் ஆண்டிபயாடீக் மருந்துகள் சில எம்முடைய உடலில் எமக்கு எதிராகவே பணியாற்றும் தன்மை கொண்டவையாக மாறிவிடுகின்றனவாம். அதனால் வைத்தியர்களின் அறிவுறுத்தல் இன்றி எவ்வகையினதான பாதிப்பிற்கும் ஆண்டிபயாடீக் மருந்துகளையோ , மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இவை உடலுக்குள் சென்று Staphylococcus epidermidis என்ற பாக்டீரியாவை போல் அழிக்கமுடியாத கிருமியாக மாறிவிடுகிறது என்றும், அதிலும் குறிப்பாக முதியவர்கள் பொருத்திக் கொள்ளும் செயற்கை மூட்டுகள், இதயத்தில் பொருத்திக் கொள்ளும் ஃபேஸ் மேக்கர்கள் போன்றவற்றின் மூலம் எளிதாக பரவி, இவை தீவிர தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது 

என்றும் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை மனித தோலில் காணப்படும் MRSA என்ற பாக்டீரியாவிற்கு இணையானது என்றும், மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு சக்தி படைத்தது என்றும் தெரிவிக்கிறார்கள்