அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2016 நிதி ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்றத்தின் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல் முறைமையின் மூலம் நாடெங்கிலும் உள்ள சகல அரசாங்க நிறுவனங்களினதும், அதாவது மத்திய அரசாங்கத்தின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், விசேட செலவுப் பிரிவுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 837 நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குறித்த நிதி ஆண்டில் அதிக செயலாற்றுகையை வெளிப்படுத்திய 101 நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.