இலங்கையில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

நியூயோர்க்கில் இன்னர்சிற்றிபிரஸ் செய்தியாளரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த  வேண்டியது சபையின்   கடமையாகும் என  குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்   உறுப்பினர்கள் சித்திரவைதக்குட்படுத்தப்பட்டதாக அறிக்கையிருக்குமானால் நாங்கள் அது தொடர்பில் ஆராய்வோம். அதை நாங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்ப்போம். என்ன நடந்தது என்பதை நாம் தேடிப் பார்ப்போம் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்  மேலும்  கூறியுள்ளார்.