(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சியினை கொண்டு செல்லும் வலிமை ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவிற்கான நிகழ்வுகள் நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலை 9.30 மணியளவில் இடம் பெறவுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகளும்  இணைந்து  நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் பொய்யாக பாவித்து விமர்சிப்பது  இயல்பான விடயமாகும்.  இவ்விடயத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டார்.